TamilTea.com
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


tamiltea

LiveZilla Live Help

Tuesday, 8 March 2016

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் (emergency contacts application)

நலமா நண்பர்களே/நண்பிகளேரொம்ப நாள் கழிச்சு வந்துர்கேன். அக்சுவல்        , எட்டி பாக்குறேன் :P 

நமது உலகில் உள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் படு வேகமாக முன்னேற்றமும் மாறுபாடும் அடைந்து கொண்டு வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மைஇன்றைய காலக்கட்டதில் நுண்ணறிபேசி அதாங்க ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்கள் மிகவும் சொற்பமேரொம்போ இழுக்குறனா?? அட சரிங்க சொல்ல வந்தத சொல்லிடுறேன்.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


"டேக்கேர்"-னு ஒரு புத்தம் புதிய அண்ட்ராய்டு செயலி இப்போது   இளைஞர்கள் / இளைஞிகள் (ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்மத்தியில பிரபலம் ஆகிட்டு வருதுஅப்படி என்ன தான் அதுஏதாவது தேறுமான்னு நான்கொஞ்சம் ஆராய ஆரமிச்சேன்அந்த செயலிய பற்றி தான் நம்ம இன்னிக்கு   பாக்க போறோம்.

"டேக்கேர்" ன்ற பேர பாத்தொன்னே ஒன்னு மட்டும் நல்ல புரிஞ்சுதுஇது ஏதோ நமக்கு உதவி பண்ணுற செயலின்னுஇதோட சிறப்பம்சம் என்னன்னாஇந்த செயலி வழியா நம்மளால 4 பேர நம்மளோட "அவசர தொடர்பு (emergency contact) எண்ணாக பதிவு செய்ய முடியும்அந்த எண்களை தேர்வு செய்வது நமது முக்கியத்துவம் பொறுத்தே அமையும். பிறகு "Add Contacts On Lock Screen" என்கிற மாற்று பட்டியை கொடுக்கவும்.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


நாம் தேர்வு செய்த எண்கள் (emergency contacts) நமது அண்ட்ராய்டு  தொலைபேசியின் பூட்டு திரையில் ஒரு சிறிய செவ்வகத்தினுள் தோன்றும்அந்த செவ்வகத்தில் முதலில் தோன்றும் எண் நாம் முதலில் தந்த  நபருடயதாக (emergency contact -1) இருக்கும்அந்த செவ்வகத்தின் வலது  புறத்தில் உள்ள அம்புக்குறியை சொடுக்கினால் அடுத்த நபரின் (emergency contact -2) எண் தோன்றும்

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


வலப்புறத்தில் உள்ள  X என்ற சின்னத்தை அழுத்தினால் அந்த செவ்வகம்  மூடிக்கொள்ளும்இந்த செவ்வகதினை எங்கே வேண்டுமானாலும் நகர்த்த   முடியும்.

"டேக்கேர்" என்ற இந்த செயலியின் மூலம்நீங்கள் ஆபத்தான நிலையில் (விபத்துமயக்கம்உடல் நலக்குறைவுஇருக்கும் போதுஉங்கள் அருகில் உள்ளவர்கள்உங்களின் நம்பகமான தொடர்புகளை (emergency contacts) தொடர்பு கொண்டு உங்களை பற்றிய விபரங்களை தெரியப்படுத்த முடியும். இதுவும் SOS போன்றதுதான்.

இந்த செயலி மத்த செயலிகள் மாதிரி இணையத்தின் இணைப்பை நம்பி இல்லைன்றது நெசமாவே நல்ல விஷமுங்கஅது மட்டும் இல்ல இது ரொம்பவும் சிறிய அளவானது - வெறும் 2 MB தான்னா பாதுக்கோங்கலேன். இந்த செயலி சுலபமா யாராலையும் புரிஞ்சிக்குற மாதிரி வடிவமைக்க பட்டிருக்கு.

"டேக் கேர்"-ன் நன்மைகள்:

1. பூட்டுதிரையில் அவசர தொடர்புகள் தோன்றும்.
2. 4 தொடர்புகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.
3. பூட்டு திரையில்நீங்கள் வேண்டும் இடத்திற்கு செவ்வகத்தை நகர்த்த   முடியும்.
4. அனைத்து வகையான பூட்டு திரையிலும் (கடவுச்சொல், PIN போன்றவை)  நன்றாக வேலை செய்யும்.

நான் பாத்த வரைக்கும் கூகுளே ப்ளே ஸ்டோர்ல நல்ல விமர்சனங்கள், 
4.9/5 மதிப்பீடுகளையும் இந்த செயலி பெற்றுருந்துதுஇந்த செயலி இப்போதைக்கு அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் வெளிவிடப்படிருக்குசீக்கிரமே iOs மற்றும் விண்டோஸ் விடுவோம்னும்மருத்துவ குறிப்புகளை இணைக்கும் வழி செய்வோம்னும் அந்த செயலியின்  அதிகார வலைத்தளத்தில்  குறிப்பிடப்பட்டுருக்கு.

இந்த செயலிய பத்தி தெரிஞ்சுக்க இதோட அதிகார அதாங்க ஆபீசியல்வலைத்தளத்த  நான் படிச்சேன்இந்த செயலிய உருவாக்குற யோசனை எப்புடி அவங்களுக்கு வந்துச்சுன்னு ஒரு நிஜ சம்பவத்த போட்ருந்தாங்கஉங்களுக்கு அந்த சம்பவத்த படிக்க நேரம் இருந்த இந்தஇணைப்ப சொடுக்குங்க.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


என்னதான் அடிபட்டு ரோடுல கேடக்குறச்ச நமளோட பர்சும்தொலைபேசியும் இருந்தாலும் அதுல நம்ம விவரங்கள் தான் இருக்குமே தவற நாம குடும்பத்தினர் பத்தி இருக்காதுநாம தொலைபேசியதான் பூட்டு போட்டு வச்சுடுறோமே!! நமக்கு நாலு பேறு உதவி செஞ்சாலும்அப்போ நமக்கு தெரிஞ்சவங்க (குடும்பத்தினரோநண்பர்களோகூட இருந்த ஆறுதலா இருக்குஅது மட்டும் இல்லாம அவங்களுக்கு நாமளா பத்தி நெறைய அத்தியாவசமான செய்திகளும் தெரிசுருக்கும்.

அடடா!! நல்ல இருக்கேன்னு தோணுதா?? இந்தாங்க இந்த இணைப்ப சொடுக்குங்கஅந்த செயலிய பதிவிறக்கம் செஞ்சுடுங்க. இந்த செயலியின் பற்றிய உங்கள் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் கூகுளே ப்ளே ச்டொரெஇல் பதிவு செய்யவும். ஏதேனும் சந்தேகங்களுக்கு  nurasquad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். 

Incoming search terms : உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர், emergency contacts - take care, SOS, emergency contact list, emergency call, SOS people, take care in case of emergency.

Posted By: Unknown on Tuesday, 8 March 2016

Thursday, 19 November 2015

கூகுள் பிளசின் புதிய அம்சம்

வணக்கம் நண்பர்களே! 

சமூக வலைத்தளங்கள் இன்றி அமையாது மனிதனின் வாழ்வு என்ற நிலைக்கு இன்றைய உலகம் வளர்ந்து  விட்டது.  நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் சமூக வலைதளங்களின் பங்கும் பெரும்பான்மையாக உள்ளது.

இன்றைய நிலையில் முகபுத்தகம், டிவிட்டர், லின்கிடு இன், கூகுள் பிளஸ் முதலிய ஏராளமான சமூக வலைத்தளங்கள் உள்ளன. நாம் இன்று பார்க்கப்போவது கூகுள் பிளஸ் பற்றிய ஓர் செய்தி.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


அதிக அளவிலான பயனாளர்களை கொண்டுள்ள இந்த இனையதளம் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டுவந்துள்ளது. மற்ற தளங்களை போலவே கூகுள் பிளசிலும் புகைப்படத்தை பகிரும் வசதி உள்ளது.

புதிதாக அதில் உள்ள மாற்றம் என்ன வென்றால்..... இவ்வாறு நாம் புகைப்படங்களை பகிரும் போது அதில் நாம் விரும்பியதை தமிழில் எழுதலாம். ஆம், தமிழ் மொழியை இதில் புதிதாக இணைத்து உள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும்ம.

இதனை செய்யும் வழிமுறைகளை இப்போது அலசுவோம்..

1. எப்போதும் போலவே "Photo" என்ற பொத்தானை அழுத்துங்கள்.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


2. உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
3. இப்போது கீதே கொடுக்கப்பட்டுள்ள திரையில் உள்ளது போன்று "Add Text" என்ற பொத்தானை அழுத்தவும்.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


4. அங்கே உங்களுக்கு வேண்டிய தமிழ் எழுத்துக்களை புகைப்படங்களின் மீது எழுதி கொள்ளலாம்.



5. "Save" என்ற பொத்தானை அழுத்தவும்.

இப்போது நீங்கள் விரும்பியது போல் தமிழ் எழுத்துக்களை புகைப்படங்களின் மீது எழுதிக்கொள்ளலாம். படித்தமைக்கு நன்றி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Incoming search terms: google plus in tamil, g+ in tamil, new feature of g+ in tamil, new g+ in tamil, g+ account in tamil, g+ feature in tamil

Posted By: Unknown on Thursday, 19 November 2015

Monday, 16 November 2015

உங்கள் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

எல்லோருக்கும் வணக்கம் !

ரொம்ப நாள் கழிச்சு உங்களலாம் சந்திகிறதுக்கு சந்தோசமா இருக்கு. இவ்ளோ நாள் கேப்-அ மேட்ச் பண்ண இதோ போஸ்ட்டு ரெடி!! 



உங்கள் கணினியில் தமிழில் தட்ட்ச்சு செய்ய வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள்? அதற்கான வழியை தேடுகிறீர்களா? இதோ உங்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக உதவும்!!

இன்றைய நிலையில் கணினியில் தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் NHMWriter.

இந்த NHMWriter மென்பொருளை எவ்வாறு உங்கள் கணினியில் பயன்படுத்துவது என்று பார்போமா?


  • இந்த மென்பொருள் தமிழ் மட்டும் அல்லாது வேறு இந்திய மொழிகளான ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காளி, குஜராத்தி ஆகியவற்றிலும் தட்டச்சு செய்ய உதவுகின்றது.
  • இதனை பயன்படுத்தி நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இதர மென்பொருள்களான Notepad, MS word, MS power-point, MS excel, Outlook ஆகியவற்றில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.
  •     இதனை பயன்படுத்த நீங்கள் தமிழ் தட்டச்சு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீங்கள் சாதாரணமாக குறுஞ்செய்தியில் பயன்படுத்தும் உங்கள் தமிழே போதும்.
விளங்கவில்லையா??

நீங்கள் உங்கள் நண்பரின் நலம் விசாரிக்க குறுஞ்செய்தியில் என்ன தட்டச்சு செய்வீர்கள்?

Hey epdi daa irukkura?

இதை NHMWriter,

ஹே எப்டி டா இருக்குர?  என்று மாற்றும்.
// ’ர’ வை ’ற்’ என மாற்ற ‘SHIFT KEY’யை பயன் படுத்தவும்.

இதனை உங்கள் கணினியில் எவ்வாறு நிறுவுவது என்று பார்ப்போம்!

இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





இப்போது உங்கள் கணினியில் இந்த கோப்பு பதிவிறக்கம் செய்ய பட்டு இருக்கும். நீங்கள் அந்த இடத்திற்கு சென்று (NHMWriterSetup1511.exe) என்ற கோப்பினை  இரண்டு முறை சொடுக்குங்கள்.



பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
முதல் படி - Next என்ற பொத்தானை சொடுக்கவும்.
2ஆம் படி - I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பொத்தானை சொடுக்கவும்.
 3ஆம் படி - Next என்ற பொத்தானை சொடுக்கவும்.
4ஆம் படி - இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பொத்தானை சொடுக்கவும்.


5ஆம் படி - Next என்ற பொத்தானை சொடுக்கவும்.
6ஆம் படி - Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
பின்னர் மென்பொருள் கணினியில் நிறுவப்படும் (இன்ஸ்டால் செய்யப்படும்).


இதனை பயன்படுத்துவது முன்பு கூறியது போலவே மிகவும் எளிது.


  • உங்கள் கணினியின் வலப்புறத்தில் கீழே மணி போன்ற உருவம் தெரியும். அவ்வாறு தெரிந்தால் உங்கள் இப்போது இயங்கிகொண்டு இருக்கிறது என்று பொருள்.



  • இந்த மணி போன்ற உருவத்தின் மீது உங்கள் சுட்டியை (mouse) வைத்து அதன் இடது பொத்தானை (left click) சொடுக்குங்கள்.
  • இதில் தங்கள் விருபதிற்கு ஏற்றாற்போல் தட்டச்சு பலகையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.




  • தமிழ் தட்டச்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற என்ற (ALT) என்ற விசையையும் 0 என்ற எண்ணையும் சேர்த்து அழுத்தவும்.
செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?


  • அந்த மணி போன்ற உருவத்தின் மீது உங்கள் சுட்டியை (mouse) வைத்து அதன் வலது பொத்தானை (Right click) சொடுக்குங்கள்.



  • அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்றலாம்.
  • அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்தால் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்



  • நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

இனி நீங்கள் எப்போதும் உங்கள் தாய் மொழியான தமிழிலேயே தட்டச்சு செய்யலாம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.



Incoming search terms : How to type in tamil, NHM writer, tamil typing software, How to write tamil in computer, tamil in word, tamil in Notepad, Typing software, Tamil typer, tamil keyboard.

Posted By: Unknown on Monday, 16 November 2015

Saturday, 30 May 2015

Picsart - A Mobile Photo Editing App அழகாக உங்கள் புகைபடத்தை மாற்ற

Picsart - A Mobile Photo EditingApp அழகாக உங்கள் புகைபடத்தை மாற்ற.


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம்.
நடுல கொஞ்ச நாள் பரீட்ச நடந்துச்சு அதாங்க வரமுடியாம போயிட்டு
ஷ்ஷ்ஷ் படிக்கலாம் இல்லங்க. நெட் போடல அதேன்.  வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.

picsart editing



Picsart மொபைல்ல பல விதமான எடிட் பண்ண முடிம்ங்க இந்த ஆஃப் வச்சி.
ஈசி யா பண்ற ஒரு எடிட் பத்தி தான் இந்த பதிவு
வீடியோ விளக்கம் தந்துருக்கேன் பாருங்க கண்டிப்பா நன்னாருக்கும்




நல்லாலனாலும் நல்லாருக்குனு சொல்லிடுங்கோ ;)

டவுட் னா தாராள மா கமண்ட்டிடவும்.
இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

Posted By: Unknown on Saturday, 30 May 2015

Friday, 1 May 2015

Facebook virus வந்தா எப்படி சரி செய்வது??

Facebook virus(Automatic Wall Post) வந்தா எப்படி சரி செய்வது??


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம். Facebook virus வந்தா எப்படி சரி செய்வது??

tamiltea1.blogspot.com

1.செட்டிங்ஸ் போய் பாஸ்வேர்ட் மாத்துங்க
2.Facebook Settingல உள்ள எல்லா Appsக்கும் Permission Remove பண்ணி விடுங்க. 
Delete பண்ணும் போது dialog boxல Delete All Your Post From This App check box select பண்ணிட்டு ரிமுவ் பண்ணுங்க


நீங்க எதனா தெரியாத Apps க்கு permission தருவதால் நடப்பது தான் இது
அவ்ளோதான் ப்ரவுசர் Cache,cookies,history டெலிட் பண்ணிட்டு யூஸ் பண்ணுங்க ;)

இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

Posted By: Unknown on Friday, 1 May 2015

Contact Us

Name

Email *

Message *

.
.
.
 

Recent Post

Recent Posts Widget
Copyright © . TamilTea. All Rights Reserved.
வாழு, வாழ விடு