Pages

Tuesday 8 March 2016

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் (emergency contacts application)

நலமா நண்பர்களே/நண்பிகளேரொம்ப நாள் கழிச்சு வந்துர்கேன். அக்சுவல்        , எட்டி பாக்குறேன் :P 

நமது உலகில் உள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் படு வேகமாக முன்னேற்றமும் மாறுபாடும் அடைந்து கொண்டு வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மைஇன்றைய காலக்கட்டதில் நுண்ணறிபேசி அதாங்க ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்கள் மிகவும் சொற்பமேரொம்போ இழுக்குறனா?? அட சரிங்க சொல்ல வந்தத சொல்லிடுறேன்.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


"டேக்கேர்"-னு ஒரு புத்தம் புதிய அண்ட்ராய்டு செயலி இப்போது   இளைஞர்கள் / இளைஞிகள் (ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்மத்தியில பிரபலம் ஆகிட்டு வருதுஅப்படி என்ன தான் அதுஏதாவது தேறுமான்னு நான்கொஞ்சம் ஆராய ஆரமிச்சேன்அந்த செயலிய பற்றி தான் நம்ம இன்னிக்கு   பாக்க போறோம்.

"டேக்கேர்" ன்ற பேர பாத்தொன்னே ஒன்னு மட்டும் நல்ல புரிஞ்சுதுஇது ஏதோ நமக்கு உதவி பண்ணுற செயலின்னுஇதோட சிறப்பம்சம் என்னன்னாஇந்த செயலி வழியா நம்மளால 4 பேர நம்மளோட "அவசர தொடர்பு (emergency contact) எண்ணாக பதிவு செய்ய முடியும்அந்த எண்களை தேர்வு செய்வது நமது முக்கியத்துவம் பொறுத்தே அமையும். பிறகு "Add Contacts On Lock Screen" என்கிற மாற்று பட்டியை கொடுக்கவும்.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


நாம் தேர்வு செய்த எண்கள் (emergency contacts) நமது அண்ட்ராய்டு  தொலைபேசியின் பூட்டு திரையில் ஒரு சிறிய செவ்வகத்தினுள் தோன்றும்அந்த செவ்வகத்தில் முதலில் தோன்றும் எண் நாம் முதலில் தந்த  நபருடயதாக (emergency contact -1) இருக்கும்அந்த செவ்வகத்தின் வலது  புறத்தில் உள்ள அம்புக்குறியை சொடுக்கினால் அடுத்த நபரின் (emergency contact -2) எண் தோன்றும்

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


வலப்புறத்தில் உள்ள  X என்ற சின்னத்தை அழுத்தினால் அந்த செவ்வகம்  மூடிக்கொள்ளும்இந்த செவ்வகதினை எங்கே வேண்டுமானாலும் நகர்த்த   முடியும்.

"டேக்கேர்" என்ற இந்த செயலியின் மூலம்நீங்கள் ஆபத்தான நிலையில் (விபத்துமயக்கம்உடல் நலக்குறைவுஇருக்கும் போதுஉங்கள் அருகில் உள்ளவர்கள்உங்களின் நம்பகமான தொடர்புகளை (emergency contacts) தொடர்பு கொண்டு உங்களை பற்றிய விபரங்களை தெரியப்படுத்த முடியும். இதுவும் SOS போன்றதுதான்.

இந்த செயலி மத்த செயலிகள் மாதிரி இணையத்தின் இணைப்பை நம்பி இல்லைன்றது நெசமாவே நல்ல விஷமுங்கஅது மட்டும் இல்ல இது ரொம்பவும் சிறிய அளவானது - வெறும் 2 MB தான்னா பாதுக்கோங்கலேன். இந்த செயலி சுலபமா யாராலையும் புரிஞ்சிக்குற மாதிரி வடிவமைக்க பட்டிருக்கு.

"டேக் கேர்"-ன் நன்மைகள்:

1. பூட்டுதிரையில் அவசர தொடர்புகள் தோன்றும்.
2. 4 தொடர்புகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.
3. பூட்டு திரையில்நீங்கள் வேண்டும் இடத்திற்கு செவ்வகத்தை நகர்த்த   முடியும்.
4. அனைத்து வகையான பூட்டு திரையிலும் (கடவுச்சொல், PIN போன்றவை)  நன்றாக வேலை செய்யும்.

நான் பாத்த வரைக்கும் கூகுளே ப்ளே ஸ்டோர்ல நல்ல விமர்சனங்கள், 
4.9/5 மதிப்பீடுகளையும் இந்த செயலி பெற்றுருந்துதுஇந்த செயலி இப்போதைக்கு அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் வெளிவிடப்படிருக்குசீக்கிரமே iOs மற்றும் விண்டோஸ் விடுவோம்னும்மருத்துவ குறிப்புகளை இணைக்கும் வழி செய்வோம்னும் அந்த செயலியின்  அதிகார வலைத்தளத்தில்  குறிப்பிடப்பட்டுருக்கு.

இந்த செயலிய பத்தி தெரிஞ்சுக்க இதோட அதிகார அதாங்க ஆபீசியல்வலைத்தளத்த  நான் படிச்சேன்இந்த செயலிய உருவாக்குற யோசனை எப்புடி அவங்களுக்கு வந்துச்சுன்னு ஒரு நிஜ சம்பவத்த போட்ருந்தாங்கஉங்களுக்கு அந்த சம்பவத்த படிக்க நேரம் இருந்த இந்தஇணைப்ப சொடுக்குங்க.

உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்
அசல் : http://www.nurasquad.com/


என்னதான் அடிபட்டு ரோடுல கேடக்குறச்ச நமளோட பர்சும்தொலைபேசியும் இருந்தாலும் அதுல நம்ம விவரங்கள் தான் இருக்குமே தவற நாம குடும்பத்தினர் பத்தி இருக்காதுநாம தொலைபேசியதான் பூட்டு போட்டு வச்சுடுறோமே!! நமக்கு நாலு பேறு உதவி செஞ்சாலும்அப்போ நமக்கு தெரிஞ்சவங்க (குடும்பத்தினரோநண்பர்களோகூட இருந்த ஆறுதலா இருக்குஅது மட்டும் இல்லாம அவங்களுக்கு நாமளா பத்தி நெறைய அத்தியாவசமான செய்திகளும் தெரிசுருக்கும்.

அடடா!! நல்ல இருக்கேன்னு தோணுதா?? இந்தாங்க இந்த இணைப்ப சொடுக்குங்கஅந்த செயலிய பதிவிறக்கம் செஞ்சுடுங்க. இந்த செயலியின் பற்றிய உங்கள் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் கூகுளே ப்ளே ச்டொரெஇல் பதிவு செய்யவும். ஏதேனும் சந்தேகங்களுக்கு  nurasquad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். 

Incoming search terms : உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர், emergency contacts - take care, SOS, emergency contact list, emergency call, SOS people, take care in case of emergency.

1 comment:

your words are precious!!